Loading...
விருது விழா என்றாலே மிக அதிக அளவில் ரசிகர்கள் வருவார்கள். காரணம் விழாவுக்கு வரும் நடிகர் நடிகைகளை நேரில் பார்க்கத்தான்.
அப்படிதான் சமீபத்தில் பாலிவுட் நட்சத்திரங்கள் பலர் கலந்துகொண்ட Kids’ Choice Awards நடந்தது. இதில் கலந்துகொண்ட நடிகை ஊர்வசி ரவுடெலா விழாவில் குழந்தைகள் செய்த அட்டகாசத்தால் தவறி கீழே விழுந்துள்ளார்.
விழாவில் அவர் குழந்தைகளுடன் போட்டோ எடுத்துக்கொண்டிருகும்போது கூட்டமாக அவர்கள் தள்ளியதால் நடிகை கீழே விழுந்தார்.
அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதே நடிகை இதற்குமுன் போட்டோஷூட் நடத்தும்போது தவறி கீழே விழுந்து அந்த வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.
Loading...