Loading...
திரிஷா என்றதும் நம் மனதிற்கு அவரின் டூயட் பாடல்கள் தான் நினைவிற்கு வரும். அவருக்கென ஒரு தனி மார்கெட்டை உருவாக்கி விட்டார். தற்போது சீனியர் ஹீரோயின் என்பதால் அழுத்தமான கதைகளை தேர்ந்தெடுக்கிறார்.
பல முன்னணி ஹீரோக்களுடன் அவர் நடித்து விட்ட அவருக்கு ரஜினியுடன் ஜோடி சேர்ந்து நடிக்க வேண்டும் என்ற ஆசையும் பேட்ட படத்தில் நிறைவேறிவிட்டது. வரும் பொங்கலும் இப்படமும் வெளியாகவுள்ளது.
அண்மையில் அவர் விஜய் சேதுபதியுடன் நடித்து வெளியான 96 படம் அதிக வரவேற்பை பெற்று ஹிட்டாகிவிட்டது. அதிலும் இவரின் மஞ்சள் கலர் சுடிதார் செட் கூட ட்ரெண்டிங்கில் வந்துவிட்டது.
பல விருதுகளை அள்ளிய இவருக்கு 96 படத்திற்காக Golden Princess of South Indian Cinema என்ற விருதை தனியார் இணையதள ஊடகம் ஒன்று வழங்கியுள்ளது.
Loading...