Loading...
கம்பஹா – மாதம்பை பகுதியில் சட்டவிரோதமாக துப்பாக்கி விற்பனையில் ஈடுபட்ட மூன்று சந்தேகநபர்களை கைது செய்துள்ளதாக கம்பஹா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் உத்தியோகஸ்தர்களால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடமிருந்து 4 தோட்டாக்களைக்கொண்ட துப்பாக்கியொன்றும் மெகசின் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம், குறித்த தொழிலில் ஈடுப்பட்டு வரும் மேலும் இரு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
Loading...
இதன் போது மினுவாங்கொட மற்றும் பிங்கிரிய பகுதிகளைச் சேர்ந்த 30 மற்றும் 43 வயதுடைய சந்தேகநபர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கம்பஹா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Loading...