யேமனில் போரிடும் கட்சிகளுக்கிடையே ஹொடைடாவில் ஏற்படுத்தப்பட்ட போர்நிறுத்தம் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் அமுல்படுத்தப்படும் என ஹெளதி ஆயுத படையின் சிரேஷ்ட அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா. அனுசரணையுடன் சுவீடனில் நடைபெற்ற சமாதான பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து ஈரான் ஒத்துழைப்பு ஹெளதி குழுவிற்கும், சவுதி ஆதரவு அரசாங்கமான அப்த் ரப்பு மன்சூர் ஹாதிக்கும் இடையே கடந்த வியாழக்கிழமை போர்நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டது.
கடந்த 2014ஆம் ஆண்டு ஹாதி அரசாங்கத்தில் சவுதி தலையிட ஆரம்பித்தத்தை தொடர்ந்து யேமன் தலைநகர் சனா மற்றும் ஹொடைடா உள்ளிட்ட பல்வேறு நகரங்களை ஹெளதி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது.
இந்நிலையில், இந்த போர்நிறுத்தமானது நாட்டில் சமாதானத்தையும், ஸ்திரத்தன்மையையும் ஏற்படுத்தும் என எதிர்பார்ப்பதாக ஹொடைடா மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
இந்த போர்நிறுத்த உடன்படிக்கையின் கீழ் சர்வதேச கண்காணிப்பாளர்கள் ஹொடைடாவில் நிலைநிறுத்தப்படவுள்ளதுடன், அனைத்து ஆயுத படைகளும் எதிர்வரும் 21 நாட்களுக்குள் முற்றாக அகற்றப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.