ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் முதலமைச்சர்கள் 06 பேர் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க போவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி பிரதமர் பதவி பறிக்கப்பட்டது.
அதன் பின்னர் நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் இடம்பெற்று வந்த நிலையில் ஜனாதிபதி தலைமையில் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பதவிப்பரமாணம் செய்துக்கொண்டார்.
இதன் மூலம் கடந்த ஆறு வாரகாலமாக நாட்டில் நீடித்து வந்த அரசியல் ஸ்திரமற்ற நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
அத்தோடு இலங்கை அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை இன்று (திங்கட்கிழமை) பதவியேற்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையிலேயே குறித்த முதலமைச்சர்கள் 06 பேர் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க போவதில்லை என தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.