Loading...
புதிய பிரதமராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுள்ள நிலையில், நாடாளுமன்ற ஆசன ஒதுக்கீடுகள் தொடர்பாக நாளைய தினம் தீர்மானிக்கப்படவுள்ளது.
நாடாளுமன்றம் மீண்டும் நாளை (செவ்வாய்க்கிழமை) கூடவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக கூடவுள்ள கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இவ்விடயம் தீர்மானிக்கப்படவுள்ளது.
Loading...
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் நாடாளுமன்ற எதிர்கால நடவடிக்கைகள் குறித்து தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
அத்துடன் நாடாளுமன்ற பாதுகாப்பு தொடர்பில் இன்று சபாநாயகருடன் கலந்துரையாட எதிர்ப்பார்த்துள்ளதாக நாடாளுமன்ற படைக்கள சேவிதர் தெரிவித்துள்ளார்.
Loading...