கச்சத்தீவு பகுதியில் இந்திய மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ராமேசுவரம், மண்டபம், பாம்பன் பகுதி விசைப்படகு மீனவர்கள் கச்சத்தீவு பகுதியில் எல்லைதாண்டி மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த சில தினங்களாக புயல் காரணமாக விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்க டோக்கன் வழங்கப்படவில்லை.
இந்தநிலையில் நேற்று பாம்பனை சேர்ந்த ஸ்டீபன் மற்றும் மில்டன், அந்தோணி, ஸ்டீபன்ராஜ் உள்ளிட்ட 8 பேர் எல்லைதாண்டி கச்சத்தீவு பகுதிக்குச்சென்று மீன்பிடி நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.
இந்நிலையில், இலங்கை கடற்படையினர் 8 பேரையும் படகுடன் கைது செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும், அவர்களை கைது செய்து காரைநகர் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றதாகவும், இலங்கை கடற்படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.