ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியைக் கொண்டாடும் மாநாடு இன்று (திங்கட்கிழமை) கொழும்பு-காலி முகத்திடலில் இடம்பெறவுள்ளது.
இந்த மாநாடு இன்று பகல் 1 மணிக்கு இடம்பெறவுள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா தெரிவித்துள்ளார்.
அத்தோடு இந்த மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்களுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி செயலகத்தில் நேற்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இந்நிலையில் இந்த வெற்றியைக்கொண்டாடும் விதமாக இந்த மாநாடு ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சியின் வெற்றிக்கொண்டாட்டமாக இந்த மாநாடு அமையவுள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா தெரிவித்துள்ளார்.
அத்தோடு “ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் எம்முடன் ஒத்துழைக்காமல் இருந்திருந்தால், நிச்சயமாக இந்த வெற்றியை எம்மால் பெற்றுக்கொண்டிருக்க முடியாது” என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.