சுவிஸ்சில் இருந்து வந்த இளம் குடும்பஸ்தர் அரச ஊழியரான தனது மனைவியின் அக்காவை கர்ப்பமாக்கி பெரும் சிக்கலில் குறித்த பெண்ணை மாட்டச் செய்துவிட்டு சுவிஸ் சென்றுள்ளார்.
கோவில் திருவிழா ஒன்றிற்காக கடந்த யூலை மாதம் சுவிசில் இருந்து தனது மனைவி மற்றும் மகனுடன் 29 வயதான இளம் குடும்பஸ்தர் யாழ்ப்பாணம் வந்துள்ளார்.
யாழ் நல்லுார்ப் பகுதயில் வசித்து வந்த இவர் சுவிஸ் செல்வதற்கு முதல் தனது 20 வயதிலேயே 17 வயதான மாணவியை காதலித்துக்கு கொண்டிருக்கும் போதே கர்ப்பமாக்கிய பின்னரே சுவிஸ் சென்றுள்ளார்.
குழந்தை பிறந்து சில ஆண்டுகளின் பின்னர் இவர் குறித்த காதலியையே திருமணம் செய்து குழந்தையுடன் சுவிஸ்சிற்கு கொண்டு சென்றார்.
அதன் பின்னர் நீண்ட நாட்களின் பின் இவர்கள் கடந்த யூலை மாதமே யாழ்ப்பாணம் முதல் முதலாக வந்ததாகத் தெரியவருகின்றது.
யாழ் வந்து மனைவியின் வீட்டில் தங்கியிருந்த குடு்ம்பஸ்தர் அங்கு திருமணமாகாத நிலையில் தாயுடன் வசித்து வந்த மனைவியின் அக்காவுடன் கள்ளத் தொடர்பில் இருந்துள்ளார்.
இவர் சுவிஸ்சில் இருக்கும் போதே மனைவியின் அக்காவுடன் தொடர்பில் இருந்ததாகத் தெரியவருகின்றது. மனைவியின் அக்கா யாழில் உள்ள முக்கிய அரச அலுவலகம் ஒன்றில் முக்கிய பதவியில் இருக்கின்றார்.
இந் நிலையில் நேற்று முன்தினம் குறித்த பெண் அரச அலுவலர் வீட்டில் கடும் இரத்தப் போக்குடன் அரைகுறையாக மயங்கிய நிலையில் மீட்கப்பட்டு யாழில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.
யுவதியின் நிலையைப் பார்த்து தாயார் கத்தியதால் அயலவர்கள் குறித்த பெண் அரச அலுவலரை யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முற்பட்ட போதும் பெண் அலுவலர் அதற்கு சம்மதிக்காது தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கும்படி அயலவர்களைக் கேட்டிருந்தாராம்.
இதன் பின்னர் குறித்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த பெண் அரச அலுவலருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் அரச அலுவலர் கருச்சிதைப்பு நடவடிக்கையை வீட்டில் மேற்கொண்டதாகவும் அதையும் சுவிசில் இருந்த தங்கையின் கணவரின் வழிகாட்டிலில் செய்ததாகவும் அறிய முடிகின்றது.
குறித்த பெண் அலுவலரின் முறையற்ற கர்ப்பத்தை அறிந்த தாயார் அயல் வீட்டில் வசித்து வந்த பிரபல பாடசாலை மாணவன் ஒருவனை சந்தேகப்பட்டு குறித்த குடும்பத்துடன் சண்டைக்குச் சென்ற போது குறித்த மாணவனின் தாயாரால் தாக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவத்தின் பின்னர் பெண் அரச அலுவரிடம் அயலவர்கள் மேற்கொண்ட விசாரணைகளிலேயே குட்டு வெளிப்பட்டுள்ளது.
மாணவனின் தாயார் மேற் கொண்ட தாக்குதலில் கடும் காயத்துடன் குறித்த பெண் அரச அலுவலரின் தாயாரும் அதே தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாராம்.