மட்டக்களப்பு வாகரை பகுதியில் வீடொன்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அப் பெண்ணின் கணவரை கைது செய்துள்ளதாக வாகரை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
வாகரை சின்னதட்டமுனி பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய சிவராசா சிரேந்தினி என்பவரே நேற்றைய தினம் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இந் நிலையிலேயே இது தொடர்பில் விசாரணை மேற்கொண்ட வாகரை பொலிசார் 24 வயதுடைய அவரது கணவனை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணைகளின் போது கணவனுக்கும் மனைவிக்குமிடையில் கருத்து முரண்பாடு நிலவி வந்ததாகவும் கூறப்படுவதோடு, குறித்த பெண் சில நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது.
அத்துடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.