ராஜா ராணி’ சீரியலில் நடித்து வரும் ஆல்யா மானசா மற்றும் சஞ்ஜீவ் கார்த்திக் இருவருக்கும் சிறந்த மற்றும் அதிகளவில் பேசப்படும் ஜோடிகள் என்ற விருதை பெற்றுள்ளனர்.
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலில் நடித்து வரும் ஆல்யா மானசாவுக்கு ரசிகர்கள் ஏராளம். சீரியலையும் தாண்டி அவரை இன்ஸ்டாகிராமில் 13 லட்சத்திற்கும் அதிகமானோர் பாலோ செய்து வருகின்றனர்.
அதற்கு முக்கிய காரணம், அடிக்கடி அவர் வெளியிட்டு வரும் டப்ஸ்மாஷ் வீடியோக்கள் தான்.
முன்னதாக மானஸ் என்பவரைக் காதலித்து வந்த மானசா கருத்து வேறுபாட்டின் காரணமாக அவரைப் பிரிந்தார். இதையடுத்து ராஜா ராணி சீரியலில் அவருடன் நடிக்கும் சஞ்சீவ் கார்த்திகை ஆல்யா மானசா காதலித்து வருகிறார். இதை இருவருமே உறுதி செய்துள்ளனர்.
இந்நிலையில் இணையதள ஊடகம் ஒன்று நடத்திய விருது விழாவில் ஆல்யா மானசா-சஞ்சீவ் கார்த்திக் இருவருக்கும் சின்னதிரையின் பிரபல மற்றும் சிறந்த ஜோடிக்கான விருது வழங்கப்பட்டது. இது அவர்களது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
