பொதுவாக சிவப்பு நிறம் கொண்ட பழங்கள் அனைத்துமே எண்ணற்ற பயன்களை தன்னுள் ஒளித்து வைத்திருக்கும். அதிலும் மாதுளை என்றால் “முத்துக்களின் ராணி” என்கிற சிறப்பு பட்டத்துடனே இருக்கும்.
எண்ணில் அடங்காத நன்மைகள் இந்த மாதுளையில் உள்ளது. மாதுளையை தினமும் சாப்பிட்டால் பலவித நன்மைகள் நமக்கு கிடைக்கும்.
ஒவ்வொரு பழத்திற்கும் ஒரு தனி தன்மை உள்ளன. அதே போன்று பழங்களை சாப்பிட கூடிய நேரமும் மாறுபடும். பொதுவாகவே காலையில் பழங்களை சாப்பிடுவது மிக சிறந்தது. இது மற்ற நேரங்களை காட்டிலும் மிக எளிமையாக செரிக்க வைத்து இவற்றின் பலன்களை முழுமையாக கிடைக்கும்படி செய்கின்றன.
மாதுளையும் இரவும்..!
பொதுவாகவே எந்த பழத்தையும் தூங்குவதற்கு முன்பு சாப்பிடுவது நல்லதல்ல. ஏனெனில், பழங்கள் சர்க்கரையை அதிகம் கொண்டவை.
எனவே இரவில் சாப்பிட்டால் அவை ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிப்பதோடு, தூக்கமின்மை, செரிமான கோளாறையும் ஏற்படுத்தும். இது மாதுளைக்கு சற்று அதிகமாகவே பொருந்தும்.
காலை உணவாக…
நீங்கள் இப்படியும் இந்த மாதுளையை காலை உணவாக சாப்பிடலாம். இது பலவித நன்மைகளை உங்களுக்கு உண்டாக்கும். உடல் எடை குறைப்பு முதல் கொலஸ்ட்ரால் பிரச்சினை வரை அனைத்திற்கும் நல்ல தீர்வை தரும்.
தேவையானவை…
- மாதுளை அரை கப்
- வெள்ளரிக்காய் 1
- ஆலிவ் எண்ணெய் 2 ஸ்பூன்
- கருப்பு மிளகு தூள் சிறிது
- எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்
செய்முறை
முதலில் வெள்ளரிக்காயை தோல் உரித்து நறுக்கி கொள்ளவும். அதன் பின் மாதுளையை சேர்த்து கொள்ளவும். சிறிது மிளகு தூள், ஆலிவ் எண்ணெய், எலுமிச்சை சாறு கலந்து கொள்ளவும்.
இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து காலை உணவாக சாப்பிடலாம். இது உங்களுக்கு அதிக ஆரோக்கியத்தை தர கூடிய உணவு வகை.
எவ்வளவு குடிக்கலாம்..?
மாதுளையை ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்த பின்னர் சாப்பிடுவது சிறந்தது என மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும், தினமும் 1 கிளாஸ் மாதுளை ஜுஸ் குடிப்பது நல்லது. எதையும் அளவுடன் சாப்பிடுவதே உடலுக்கு தீங்கை தராது.