புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை நாளை சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுள்ள நிலையில், அமைச்சரவை தொடர்பாக கடந்த இரு தினங்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
சுதந்திர கட்சியின் சிலரும் அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அமைச்சரவையை இறுதிப்படுத்துவதில் சிக்கல் நிலை காணப்பட்டது. குறிப்பாக முக்கிய அமைச்சுப் பொறுப்புகளை பகிர்ந்தளிப்பதில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளேயே குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், இன்று இதுகுறித்து இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று, நாளை அமைச்சரவை பதவியேற்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 பேர் என்ற அளவிலேயே அமைச்சரவையை வரையறைக்குட்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.