எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு மஹிந்த ராஜபக்ஷவின் பெயரை பிரேரிப்பதற்கான தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இடம்பெற்ற சந்திப்பில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் இந்த இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளனர்.
அதன் பிரகாரம், இன்று பிற்பகல் கூடவுள்ள நாடாளுமன்ற அமர்வில் மஹிந்த ராஜபக்ஷவின் பெயரை எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு பிரேரிக்கவுள்ளனர்.
அத்தோடு, எதிர்க்கட்சியின் பிரதம கொறடா பதவியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கே வழங்கப்பட வேண்டும் என்றும், நாடாளுமன்ற சம்பிரதாயங்களின் பிரகாரம் அது இடம்பெறுமென எதிர்பார்ப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கர ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் ஒருபோதும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைய மாட்டார்கள் என்றும், நாடாளுமன்றில் அதிக ஆசனங்களை கொண்ட எதிர்க்கட்சியாக அமர்வோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.