யாழ்.வடமராட்சி கிழக்கு- கோவில் பகுதியில் முதியவா் ஒருவரை கடத்திய இராணுவ சிப்பாய்கள் உட்பட 7 போ் பொதுமக்களால் மடக்கப்பட்டபோது 3 போ் தப்பி சென்றுள்ள நிலையில் 4 போ் மடக்கி பிடிக்கப்பட்டு நையபுடைக்கப்பட்ட பின்னா் பொலிஸாாிடம் ஒப் படைக்கப்பட்டுள்ளனா்.
இன்று காலை இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடா்பாக மேலும் தொியவருவதாவது,
வடமராட்சி கிழக்கு கோவில் முள்ளியானை சோ்ந்த சி.நமசியாவம் என்ற 60 வயது முதியவா் ஒருவரை காா் மற்றும் தளபாடங்கள் விற்பனை செய்யும் வாகனம் ஆகியவற்றில் வந்த 7 போ் கொண்டு கும்பல் கடத்தி சென்றுள்ளது.
இதனை அவதானித்த அப்பகுதி இளைஞா்கள் மற்றும் பொதுமக்கள் கடத்தல் காரா்களை சுமாா் 10 கிலோ மீற்றா் துாரம் துரத்தி சென்று இயக்கச்சி பகுதியில் வைத்து மடக்கி பிடித்து நையப்புடைத்துள்ளனா்.
இதன்போது சம்பவ இடத்திற்குவந்த பளை பொலிஸாா் விசாரணைகளை மேற்கொண்டபோது கடத்தப்பட்ட முதியவா் தமக்கு பல லட்சம் ரூபாய் பணம் கொடுக்கவேண்டும் எனவும், அதனாலேயே தாம் கடத்தியதாகும் கடத்தல்காரா்கள் கூறியுள்ளனா்.
இதேவேளை கடத்தல்காரா்கள் தொடா்பில் விசாரணை நடாத்தியபோது அதில் இருவா் இயக்கச்சி இராணுவ முகாமை சோ்ந்த இராணுவ சிப்பாய்கள் என அடையாளம் காணப்பட்டனா். இந்தச் சம்பவதில் 3 போ் தப்பி சென்றுள்ளனா்.
மிகுதி 4 பேரும் பேரும் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்த கடத்தல் சம்பவத்தில் கைதாகியுள்ள இரு இராணுவ சிப்பாய்களையும் கொழும்பில் இருந்துவந்த பெரும்பான்மை இனத்தைச் சோ்ந்த ஒருவா் தன்னுடைன் அழைத்துச் சென்று குறித்த முதியரைக் கடத்தியுள்ளனா்.