காலில் அணிந்த சாக்ஸை (Socks)முகர்ந்து பார்த்த நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் ஃப்ஜியான் (Fujian) மாகாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், தினமும் வேலை முடிந்து வீடு திரும்பியதும், காலில் அணியும் சாக்ஸை முகர்ந்து பார்க்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். வழக்கம் போல் சாக்ஸை (Socks) முகர்ந்து பார்க்கும் போது அவருடைய கால் வியர்வையாக இருந்ததால் சாக்ஸில் பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ளது.
பூஞ்சை தொற்று
இதனை அறியாத அவர் அந்த சாக்ஸை (Socks) முகர்ந்தபோது, அவருக்கு அந்த பூஞ்சைத் தொற்று ஏற்பட்டு அது நுரையீரலைத் தாக்கியதால் உயிரிழந்துள்ளார்.
அது மட்டுமல்லாமல் குறித்த நபர் குழந்தையைப் பார்த்துக் கொள்வதற்காக, இரவில் நீண்ட நேரம் விழித்திருந்திருந்துள்ளார். இதனால் அவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தது என அவருடைய மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் துர்நாற்றம் அடிக்கும் சாக்ஸ் (Socks) உயிரைப் பறிக்கும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.