சென்னையில் அரசு மருத்துவமனைக்கு வந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் மாயமானதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புரசைவாக்கம் – சூளையைச் சேர்ந்த சுதாகரின் மனைவி, காயத்ரி நிறைமாத கர்ப்பமாக இருந்த நிலையில், சேப்பாக்கத்தில் உள்ள தாய் வீட்டில் இருந்துள்ளார்.
பரிசோதனையில் டிசம்பர் 17 ஆம் தேதி உத்தேச பிரசவ தேதி என மருத்துவர்கள் கூறியிருந்ததால், திருவல்லிக்கேணி கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனையில் சேர, கணவர் சுதாகர் மற்றும் தாயுடன் சனிக்கிழமையன்று காயத்ரி சென்றுள்ளார். ரத்தப் பரிசோதனைக்குப் பிறகு, மருத்துவமனை தாழ்வாரத்தில் காயத்ரி நடைபயிற்சி செய்துள்ளார்.
சிறிது நேரத்துக்குப் பிறகு அவர் அங்கிருந்து காணாமல் போனதால், கணவரும், தாயும் தேடியுள்ளனர். 2 நாள்களாக எங்கு தேடியும் கிடைக்காத நிலையில், இன்று திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் சுதாகர் புகார் அளித்துள்ளார்.