ஆண்மீகம்,அமைதி,மௌனம் காக்கவேண்டிய ஆலயங்களில் இன்று அடிதடி கலாச்சாரம், புலம்பெயர்வில் ஆரம்பமாகிவிட்டதோ?
கதைத்து தீர்க்கவேண்டி விடயங்களை நாகரீகமற்ற முறையில்,சத்தம்போட்டு,கத்திப்பேசி ஆலயத்தின் புனிதத்தன்மைமை மதிக்காமல் செயல்பட்ட காட்சிகள் இனையத்தலங்களில் காணக்கூடியதாக இருந்தது, சுவிஸ்நாட்டில் பலகாலமாக வசித்துவரும் இவர்கள் ஏன்இப்படி நடக்கிறார்கள் என்பது புரியாமல் இருக்கிறது, இவர்களின் இப்படியான செயல்களைப்பாரத்த எமது அடுத்தசந்ததி எமது சமயத்தை கடைப்பிடிப்பாரார்களா?ஆலயங்களுக்கு வரத்தான் விரும்புவார்களா?
எம்மவர்சிலரின் இந்த செயலைப்பார்க்கும் சுவிஸ் நாட்டவரகளும்,பிறநாட்டவர்களும் எம்மினத்தின் இந்த செயலைப்பார்த்து என்ன நினைப்பார்கள்!
இவர்கள் அரசியல்அடைக்கலம் கேட்டு அகதிகளாகவந்து சமயத்தை காரணம்காட்டி இங்கு தங்களுக்குள் தாங்களே அடிப்படுகிறார்களே என்று ஏலனமாக பேசுவார்கள் !
சிங்கள இனத்தவர்களால் எமக்கு பிரச்சினை என்றுசொல்லிக்கொண்டு இங்கு வந்து எமக்குள் குத்து வெட்டு செய்து கொள்வது கேவலமாக இல்லையா?
ஆலயம் அன்னதான மடமாக மாறியதா?
வியாபாரத்தலமாக மாறியதா?
ஏன் இந்த பக்தர்கள் இப்படி கூச்சல் போடுகிறார்கள் !சட்டப்படி நடவுங்கள் ,அன்பே சிவம் என்று சொன்னது “சைவசமயம்”அந்த சைவ சமயத்தை “அசைவசமயமாக”மாற்றிவிடாதீர்கள்!
நீங்கள் செய்யும் இந்த நாகரீகமற்ற செயல்களை பார்க்கும்போது சிங்கள அரசாங்கம் எமக்கு செய்தது சரியென்றுதான் சொல்லத்தோன்றுகிறது.
ஆண்டுக்கு ஒருமுறைதான் இந்து ஆலயங்களில் சூரன் போர்வரும் இதை பார்த்தால் ஒவ்வொரு நாளும் சூரன் போரோ என்று தோன்றுகிறது!
சிந்தியுங்கள் தமிழர்களே ,