பனி காலத்தில் மிகவும் வரண்டு சோர்வுடன் நமது சருமம் காணப்படும். இதனை எவ்வாறு சரி செய்வது என்பதை பற்றி பார்ப்போம்
தக்காளி தயிர்
பனி காலத்தில் நம்மில் சிலருக்கு அதிக வரட்சி காரணமாக வெடிப்புகள் ஏற்படும். இதனால் தோல் உறிந்து காயங்கள் ஏற்படும். மேலும் இவை இரண்டு நாட்களில் தழும்புகளாக மாற நேரிடும். இந்த மாதிரியான தருணங்களில் தயிருடன் தக்காளி பழத்தை நன்கு மசித்து முகத்தில் மற்றும் தோல் வர்ணடு இருக்கும் இடங்களில் தடவினால் முகம் பொலிவுடனும் பழபழப்பாகவும் இருக்கும். தக்காளி முகத்திற்கு நல்ல ப்ளிச் பேக் போன்று செயல்படும். தயிர் இருக்கும் நல்ல பேக்டீரியாக்கள் வரண்ட சருமத்தை பொழிவுடன் மாற்றுவதுடன் தழும்புகளை விரைவில் மறையச்செய்கின்றது.
ஆரஞ்சு தேன்
ஆரஞ்சு தோளை நன்கு காயவைத்து அதனுடன் தேன் கலந்து பேஸ் பேக் போன்று ரெடி செய்து காலை எழுந்ததும் முகத்தில் தடவி பாருங்கள். முகத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். ஆரஞ்சில் இருக்கும் விட்டமின் சி சருமத்தை நல்ல இளமையாக வைத்துக்கொள்ள உதவுகின்றது. அதனுடன் தேன் கலந்து பேஸ் பேக் போட்டால் இன்னும் மினுமினுப்பை அதிகப்படுத்தும். இது ஒரு மேஜிக் பேக் என்றும் சொல்லலாம். உங்கள் சருமம் மிருதுவாக மாறுவதுடன் பேசியல் செய்துகொண்டதற்கான ஈடான பலனை பெறலாம். இதனுடன் கான்ப்ளார் மாவையும் சேர்த்து அப்ளை பண்ணலாம். பேஸ் பேக் கொஞ்சம் கெட்டியாக முகத்துடன் நன்கு ஒட்டவேண்டும் என்று நினைப்பவர்கள் இதனை பயன்படுத்தலாம். வரண்ட சருமம் உள்ளவர்கள் கான்ப்ளார் மாவை தவிர்ப்பது நல்லது.
வைட்டமின் சத்துக்கள்
வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ சத்துள்ள உணவுகளை பழங்களை அதிகம் சாப்பாட்டில் எடுத்துக்கொள்ளுங்கள். பனி காலங்களில் வெளியில் செல்லும் போது முகத்தையும் சருமத்தையும் குளிர்காற்றில் காட்டாமல் இருப்பதே நல்லது. உடலை நன்கு மூடி நன்றாக கவர் செய்யும் ஆடைகளை அணிந்துகொண்டு வெளியில் செல்லுங்கள்.
ஆவகேடோ பழமும் ஆலிவ் ஆயிலும்
பனிக்காலத்தில் அதிகம் மேக் அப் போட வேண்டாம். வீட்டில் எப்போதும் வெண்ணெய் வைத்துக்கொள்வது நல்லது. உதடு வெடிப்பு, சரும வெடிப்பு உள்ள இடங்களில் வெண்ணையை தொடர்ந்து தடவி வரலாம். ரசாயன கலப்பு உள்ள மாய்ச்சரைசர்களை தவிர்த்து விடுவது நல்லது. ஆவகேடோ பழமும் ஆலிவ் ஆயிலும் சருமத்தை நன்கு பராமரிக்க உதவும். ஆவகேடோ பழத்தை மசித்து அதில் ஆலிவ் ஆயில் சேர்த்து முகத்தில் தடவுங்கள்.
கற்றாழை, பப்பாளி
வீட்டு தோட்டத்தில் கற்றாழை வளர்ப்பது அவசியம், அதேபோல பப்பாளி மரமும் இன்றைக்கு பலரும் வளர்க்கின்றனர். மழை, பனி காலத்தில் இவை நன்கு செழித்து வளர்ந்திருக்கும். இரண்டுமே சரும வறட்சியை போக்கும் பண்பு கொண்டவை. காலை நேரத்தில் முகத்திலும் சருமத்திலும் கற்றாழையை தடவி பின்னர் சில நிமிடங்கள் கழித்து குளிக்க வறட்சி நீங்கும். பப்பாளியில் வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளது. நன்கு கனிந்த பப்பாளி பழத்தை கூழ் போல அரைத்து முகத்திலும் உடம்பிலும் தேய்த்து உலர வைத்து பின்னர் குளிக்க சருமம் பொலிவடையும்.
வேப்ப எண்ணெய் வெள்ளரிக்காய்
வேப்பிலை நோய் நிவாரணி. அம்மை போட்டவர்கள் தண்ணீர் ஊற்றும் போது வேப்பிலை, மஞ்சளை போட்டு குளிக்க வைப்பார்கள். வீட்டின் கொல்லைப்புறத்தில் வேப்ப மரம் இருந்தால் அதன் இலைகளை பறித்து அரைத்து குளிக்கும் நீரில் வாரம் ஒருமுறை கலந்து குளிக்கலாம். வேப்ப எண்ணெய் சரும வறட்சியை நீக்கும். இதனை கை, கால்களில் பூசலாம். வெள்ளரிக்காயில் அதிக தண்ணீர் சத்து உள்ளது. இது உடம்பின் வறட்சியை நீக்கும். வெள்ளரிக்காயை சாப்பிடுவதன் மூலம் சரும வறட்சி நீங்கும். அதே போல வெள்ளரிக்காயை வட்டமாக வெட்டி கை கால்களில் வைத்துக்கொள்ள வறட்சியை தடுக்கலாம்.
பால், பாதாம், எலுமிச்சை
எலுமிச்சை ஜூஸ் ஒரு டீ ஸ்பூன், பால் பவுடர் ஒரு டீ ஸ்பூன், பாதாம் பவுடர் ஒரு டேபிள் ஸ்பூன் சேர்த்து மிக்ஸ் செய்து பேஸ்ட் போல வைத்துக்கொள்ளவும். இதனை தினமும் தடவி வந்தால் சருமத்தை சாஃப்ட் ஆக்கும். வறட்சியாக உள்ள முகம், கழுத்து கைகளில் தடவி பேக் போட்டு குளிக்க சருமம் மென்மையடையும். இதனை தயார் செய்து ப்ரிட்சில் ஒரு கண்டைனரில் சேர்த்து வைக்கலாம்.
கேரட், பால் சிகிச்சை
நன்றாக தண்ணீர் குடித்தாலே சரும வறட்சி நீங்கும். வறட்சியான கருமையான சருமம் கொண்டவர்கள், வைட்டமின் சத்து நிறைந்த கேரட், பால் கலந்து முகம், சருமத்தில் அப்ளை செய்ய முகமும், சருமமும் பளபளப்பாகும். வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் சரும செல்களை பாதுகாக்கும். சருமத்தின் மென்மை தன்மையும் அதிகரிக்கும்.