கனடாவில் வாழும் பிரபல ரொமேனிய – கனடா பாடகியான Anca pop (34) கார் விபத்து ஒன்றில் நேற்று முன் தினம் உயிரிழந்துள்ளார்.
அவர் பயணம் செய்த கார் தென் மேற்கு ரொமேனியாவில் உள்ள Danube நதியில் தலைகுப்புற கவிழ்ந்து இந்த சோக சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தாயை சந்திக்கச் சென்ற தனது தங்கை இரவு வெகு நேரமாகியும் வீட்டுக்கு திரும்பாததால் Ancaவின் சகோதரி பொலிசாருக்கு தகவலளித்ததின்பேரில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பொலிசார் அவரது காரைக் கண்டுபிடித்தனர்.
ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் Ancaவின் உடலை நதிக்கடியிலிருந்து மீட்டதாக தெரியவந்துள்ளது.
பாடகியாகி 2015ஆம் ஆண்டு ஏப்ரலில் ‘free Love’ என்ற ஆல்பத்தை Anca வெளியிட்டதன் மூலம் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். ஆல்பம் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றதோடு பிரித்தானியர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது.
அதை சிறந்த பாப் பாடலாக தேர்ந்தெடுக்க 10,000 பேருக்கும் அதிகமான பிரித்தானியர்கள் வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.