தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெயை உணவில் அதிகம் சேர்த்து கொண்டால் உடல் எடைய குறையும். இதில் வைட்டமின், தாதுக்கள் மற்றும் உடலுக்கு தேவையான கலோரிகள் இருக்கிறது. தினசரி உணவில் சிறிதளவு தேங்காய் சேர்த்து சாப்பிடுவது மிகவும் நல்லது.
இளநீர் குடிக்கலாம்
இளநீர் எல்லோருக்கும் பிடித்தமான பானம். இதில் வைட்டமின் மற்றும் தாதுக்கள் நிறைந்திருக்கிறது. சில சமயங்களில் உடலில் எலக்ட்ரோலைட் போன்ற பொட்டாஷியத்தின் அளவு குறையும் என்பதால் இதனை தினசரி குடிக்கலாம். இது உங்களை எப்போதும் ஹைட்ரேட்டாக வைத்து கொள்ளும். உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள் தினசரி இளநீர் குடிக்கலாம்.
இரத்த அழுத்தம் குறைய
இளநீரில் பொட்டாஷியம் நிறைந்திருப்பதால் இரத்த அழுத்தத்தை குறைக்கும். நெஞ்செரிச்சல் இருப்பவர்களுக்கு இளநீர் சிறந்த மருந்து. மேலும் ஞாபக மறதி மற்றும் அல்சீமர் போன்ற பிரச்சனைகளை சரிசெய்யும் தன்மை இளநீருக்கு உண்
நார்ச்சத்து
உடல் எடை குறைப்பில் தேங்காய்க்கு முக்கிய பங்கு உண்டு. தினசரி மாலை நேரத்தில் தேங்காய் சேர்த்து உணவுகளை சாப்பிடும்போது உடலுக்கு தேவையான நார்ச்சத்து கிடைத்துவிடும். உங்களை நிறைவாக வைத்திருக்கும். இதனால் உடல் எடை குறையும்.
தேங்காய் சேர்த்த உணவுகள்
- கறிவேப்பிலை, இஞ்சி, பருப்பு, தேங்காய் மற்றும் சாதம் சேர்த்து செய்யப்படும் இந்த தேங்காய் சாதத்தை கிரேவி, தயிர், அப்பளம் மற்றும் ஊறுகாய் சேர்த்து சாப்பிடலாம். வெஜிடபிள் கிரேவி மற்றும் குருமா சேர்த்தும் சாப்பிடலாம்.
- தேங்காய், பச்சை மிளகாய், உப்பு மற்றும் சீரகம் சேர்த்து தயாரிக்கப்படும் தேங்காய் சட்னியை தோசை, இட்லி, பொங்கல் மற்றும் உப்மாவுடன் சேர்த்து சாப்பிடலாம்.
- துருவிய தேங்காய், சர்க்கரை அல்லது வெல்லம், ஏலக்காய் பொடி மற்றும் பால் சேர்த்து தயாரிக்கப்படும் தேங்காய் லட்டு வீட்டிலேயே செய்து சாப்பிடலாம்.