20-12-2018 இன்றைய ராசி பலன்கள் உங்களுக்கு எப்படி? விளம்பி வருடம், மார்கழி மாதம் 5ம் திகதி, ரபியுல் ஆகிர் 12ம் திகதி, 20-12-2018, வியாழக்கிழமை, வளர்பிறை திரயோதசி திதி இரவு 3:30 வரை; அதன்பின் சதுர்த்தசி திதி, கார்த்திகை நட்சத்திரம் இரவு 2:21 வரை; அதன்பின் ரோகிணி நட்சத்திரம், மரண யோகம்.
* நல்ல நேரம் : காலை 10:30-12:00 மணி
* ராகு காலம் : மதியம் 1:30-3:00 மணி
* எமகண்டம் : காலை 6:00-7:30 மணி
* குளிகை : காலை 9:00-10:30 மணி
* சூலம் : தெற்கு
பரிகாரம் : தைலம்
சந்திராஷ்டமம் : சுவாதி, விசாகம்
பொது : பிரதோஷம், கார்த்திகை விரதம், நந்தீஸ்வரர், முருகன் வழிபாடு.
மேஷம்:
சிலர் உங்களை சுயநல நோக்குடன் அணுகுவர். கவனமுடன் பேசுவதால் சிரமம் தவிர்க்கலாம்.
தொழில், வியாபாரதில் வளர்ச்சி இலக்கை அடைய விடாமுயற்சி தேவைப்படும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்க தாமதமாகும். வாகனத்தில் மிதவேகம் நல்லது.
ரிஷபம்:
சந்தோஷ எண்ணங்களால் உற்சாகம் பெறுவீர்கள். பிறருக்கு இயன்ற அளவில் உதவுவீர்கள்.
தொழில், வியாபாரம் செழிக்க புதிய அனுகூலம் உருவாகும். தாராள பணவரவு கிடைக்கும். பெண்கள் வீட்டை அழகுபடுத்த கலையம்சம் நிறைந்த பொருள் வாங்குவர்.
மிதுனம்:
உங்களின் தன்மான குணத்துக்கு சோதனை வரலாம். மனஅமைதியை பாதுகாப்பது நல்லது.
தொழில், வியாபாரத்தில் இடையூறுகளை சரி செய்வீர்கள். மிதமான பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் விழிப்புடன் செயல்படுவது நல்லது.
கடகம்:
அனைவரிடமும் இயல்புடன் பழகுவீர்கள். நண்பரின் கருத்தை விமர்சிக்க வேண்டாம். தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலம் பாதுகாப்பது நல்லது.
பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்வர். கடன் வாங்க நேரிடும். பெண்களுக்கு தாய் வீட்டு உதவி கிடைக்கும்.
சிம்மம்:
கடந்த கால சிரமம் அனைத்தும் விலகும். செயல்களில் உற்சாகமுடன் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிப்பணி இனிதே நிறைவேறும்.
உபரி வருமானம் கிடைக்கும். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாடு நடத்துவர்.
கன்னி:
பேச்சில் நிதானம் பின்பற்றுவது அவசியம். தொழில், வியாபாரத்தில் இலக்கு நிறைவேற கூடுதல் பணிபுரிவீர்கள்.
வருமானம் குறையும். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம். பெண்கள் நகை, பணம் இரவல் கொடுக்க வேண்டாம்.
துலாம்:
சிலர் உங்களிடம் உதவி கேட்டு அணுகுவர். இயன்ற அளவில் உதவி புரிந்து நற்பெயரை பாதுகாத்திடுவீர்கள்.தொழில், வியாபாரம் செழிக்க கூடுதல் உழைப்பு தேவைப்படும்.
நிலுவைப்பணம் விடாமுயற்சியால் கிடைக்கும். வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்ளவும்.
விருச்சிகம்:
நண்பரின் மனம் நிறைந்த வாழ்த்து கிடைக்கும். திட்டமிட்ட செயல்களை எளிதாக நிறைவேற்றுவீர்கள்.
தொழில், வியாபாரத்தில் கூடுதல் வளர்ச்சி ஏற்படும். தாராள பணவரவு கிடைக்கும். பெண்கள் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவர்.
தனுசு:
உங்களின் தகுதி திறமையை வளர்த்துக் கொள்வீர்கள்.தொழில், வியாபாரத்தில் அபிவிருத்திப்பணி நிறைவேறும்.
தாராள அளவில் பணவரவு கிடைக்கும். மனைவி விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
மகரம்:
பிறரிடம் குடும்ப விஷயம் பேச வேண்டாம். தெய்வ நம்பிக்கையுடன் செயல்படுவது நன்மையளிக்கும்.
தொழில்,வியாபாரத்தில் சிரமம் ஓரளவு குறையும். மிதமான பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் சிரமத்திற்கு ஆளாகலாம். சீரான ஓய்வு உடல்நலனை பாதுகாக்கும்.
கும்பம்:
தாயின் அன்பும், ஆசியும் பலமாக கிடைக்கும். சிறு செயலையும் நேர்த்தியுடன் செய்வீர்கள்.
தொழில், வியாபாரத் தொடர்பு பலம் பெறும். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். இயன்ற அளவில் அறப்பணி செய்து மகிழ்வீர்கள்.
மீனம்:
சமூகப்பணி புரிவதில் ஆர்வம் கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும்.
நிலுவைப் பணம் வசூலாகும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். குடும்பத்தின் தேவை குறையின்றி நிறைவேறும்.