ஜேர்மனியின் பெரிய விமான நிலையங்கள் சிலவற்றுக்கு அந்த நாட்டு உளவுத்துறையினரால் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஸ்டட்காட் விமான நிலையத்தில் நான்கு சந்தேகத்திற்கிடமான தீவிரவாதிகளின் பிரசன்னத்தை அடுத்து இந்த அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், வடக்கு ரைன் வெஸ்ட்பாலியாவைச் சேர்ந்த தந்தை, மகன் மற்றும் மேலும் இரண்டு பேர் விமான நிலையத்தின் முனையம் மற்றும் தரைப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் புகைப்படம் எடுத்ததை அடுத்து அவர்களை தேடும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்கள் மொரோக்கோ புலனாய்வு சேவையிடமிருந்து ஜேர்மன் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளன.
பிரான்ஸ் எல்லையில் தீவிரவாத தாக்குதல் இடம்பெற்று ஒருவார காலத்தின் பின்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.