மட்டக்களப்பில் கடந்த சில நாட்களுக்கு முன் புடையன் பாம்புக் கடிக்கு ஆளாகி வைத்தியசாலையில் உயிருக்காகப் போராடிய அருட் தந்தை செற்றிக் ஜூட் ஒக்கர்ஸ் அவர்களை இறைவன் தன்னிடமாக அழைத்துக் கொண்டார்.
மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தில் அவரின் இறுதி நல்லடக்க. ஆராதனை நிகழ்வுகள்.. இன்று பி.ப 2.30 மணியளவில் இடம்பெற்று புதூர் ஆலையடிசோலை கத்தோலிக்க சேமக்காலையில்நல்லடக்கம் செய்யப்பட்டது..