யேர்மனியில் புகலிடம் கோரி விண்ணப்பிப்பவர்களுக்கான புதிய வரைவுகள் நேற்றிலிருந்து நெறிப்படுத்தப்படுகின்றன. ஏற்கனவே யேர்மனியில் புகலிடம்கோரி இன்னமும் வதிவிட அனுமதிபெறாதவர்களுக்கும் இது பொருந்தும்.
1. புகலிடக்கோரிக்கை வரையறையின்றிய நிலுவையில் இருக்கும். தற்காலிக (Duldung) வதிவிட அனுமதியே முதலில் வழங்கப்படும்.
2. முதல் வருடத்தினுள் (விடுமுறைகள் தவிர்ந்த 180 வேலைநாட்களுக்குள்) அடிப்படை மொழியறிவு அல்லது தொழில்சார்கற்கைநெறியினை நிறைவுசெய்தல் வேண்டும்.
3. இல.2 இற்குரிய வரைவை நிறைவுசெய்ய முடியாவிடின் முழுநேரவேலை ஒன்றினை (மாதம் 160 மணிநேரம்) தேடிக்கொள்ள வேண்டும்.
4.தொழிற்கற்கைநெறி, அல்லது முழுநேரவேலையைப் பெற்றிருப்பினும் மூன்று வருடங்களுக்கு தற்காலிக வதிவிட அனுமதியே வழங்கப்படும். (மூன்று மாதங்களுக்கொருமுறை புதுப்பிக்கவேண்டிய வதிவிட அனுமதி)
5. முதல் மூன்று வருடங்களுள் கற்கைநெறியில் சித்தி எய்தினாலோ, அல்லது மூன்றுவருடங்களாகத் தொடர்ந்து வேலைசெய்தாலோ; நான்காவதுவருடத்தில் உங்களுக்கான காலவரையறையற்ற வதிவிட அனுமதியை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.
6.மூன்று வருடங்களுக்குள் தொழிற்கற்கைநெறி , மொழியறிவு அல்லது முழுநேர வேலை ஏதாவது ஒன்றையாவது பெற்றிராவிடில் உடனடியாக குறித்த நபர் யேர்மனியை விட்டு வெளியேற்றப்படுவார்.