Loading...
ரெக்ஸ்டலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டை அடுத்து 41 வயதுடைய ஆண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இஸ்லிங்டன் அவென்யூ மற்றும் ரெக்ஸ்டலே பவுல்வர்டு பகுதியில் இன்று (திங்கட்கிழமை) காலை இச் சம்பவம் இடம்பெற்றது.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மற்றும் அவசர மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டனர்.
Loading...
குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவமானது ஒரு வீட்டிற்குள் நடந்தது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதில் பாதிக்கப்பட்டவர் வயிற்றின் அடிப்பகுதில் ஏற்பட்ட தீவிர காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
சந்தேக நபர்களை பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியிடாத ரொறன்ரோ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...