சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகளில் திருத்தங்களை மேற்கொள்ள மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இனம் மற்றும் மதம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் தகவல்களின் காரணமாகவே பெரும்பாலான வன்முறை சம்பவங்கள் தோற்றம் பெறுகின்றன. ஆகையால் அவற்றை தடுக்கும் நோக்குடனே சட்ட விதிகளில் திருத்தங்களை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக அவ்வமைச்சு சுட்டிகாட்டியுள்ளது.
அந்தவகையில் தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகளில் விரைவாக திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதுடன் அதனை இணைத்தளத்தில் வெளியிட்டு, மக்களின் கருத்தினை 15ஆம் திகதிக்குள் பெற்றுகொள்ளவுள்ளதாகவும் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
குறித்த விடயத்தில் மக்களின் கருத்தின் அடிப்படையில் இறுதி தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக அவ்வமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.