ராமஜென்ம பூமியை சன்னி வக்பு போர்டு, நிர்மோஹி அக்ஹாரா, ராமர் கோயில் ஆகிய 3 அமைப்புகளும் சமமாக பிரித்துகொள்ள வேண்டுமென அண்மையில் அலகாபாத் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இதன்போது, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக 14 மேல்முறையீட்டு மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் இம்மனுக்களை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி எஸ்.கே.கவுல் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு உட்படுத்தியது. பின்னர் ஜனவரி 4ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பு, ராமர் கோயில் கட்டுவது தொடர்பான வழக்கில், 2.77 ஏக்கர் நிலமே பிரச்சினைக்குரிய நிலமாக காணப்படுகின்றது. இந்நிலத்தையே சன்னி வக்பு போர்டு, நிர்மோஹி அக்ஹாரா, ராமர் கோவில் ஆகிய அமைப்புக்களை சமமாக பிரித்துக்கொள்ளுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.