ஈரோட்டில் 13 வயதுடைய பள்ளி மாணவியை பேசி மயக்கி சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் வெள்ளோடு பகுதியை சேர்ந்தவர் வர்ஷா(13). இந்த சிறுமி அதே பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தார். அதே பள்ளியில் வேன் டிரைவராக வேலை புரிந்து வந்த விக்னேஷ் என்பவன் மாணவியை மயக்கும்படி பல சேட்டைகள் செய்துள்ளான். இதனால் அந்த மாணவியும் அவனது வலையில் சிக்கியுள்ளார்.
சிறுமியை மயக்கிய டிரைவர்
இந்நிலையில் பள்ளிக்கு சென்ற மாணவியுடன் எஸ்கேப் ஆன விக்னேஷ், நண்பர்களின் உதவியுடன் வர்ஷாவை ஒரு லாட்ஜில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்து சீரழித்துள்ளான். இதனால் மகள் காணாமல் போனதால், இதுகுறித்து அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் விசாரணையை தொடங்கிய பொலிசார், பதுங்கியிருந்த விக்னேஷையும் அவனது கூட்டாளிகளையும் கைது செய்தனர். சிறுமி மீட்டு அவளது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
மேலும் குற்றவாளிகளான விக்னேஷ் மீது பொலிசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விக்னேஷுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தையும் உள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.