என்டர்டைன்மெண்ட் மாவட்ட பகுதியில் இன்று (வியாழக்கிழமை) நள்ளிரவு இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ரிச்மண்ட் ஸ்ட்ரீட் மற்றும் ஸ்பேடினா அவென்யூ பகுதியில் நள்ளிரவு 1:50 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இரு நபர்களுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பை அடுத்து குறித்த கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே படுகாயமடைந்து இருந்ததாகவும் ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த ஆண் மீட்கப்பட்டு தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தற்போது ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றைய நபர் கார் ஒன்றில் தப்பி சென்றுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.