Loading...
ஒட்டாவா மற்றும் கிழக்கு ஒன்ராறியோ பகுதியில் நத்தார் தினத்தை அடுத்து அப்பகுதிகளுக்கு உறைபனி எச்சரிக்கை சுற்றுசூழல் கனடா விடுத்துள்ளது.
இந்நிலையில் இன்று மாலை அல்லது இரவு வேளையில் உறைபனி மழையுடன் ஆலங்கட்டி மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
Loading...
அத்தோடு குறித்த உறைபனி மழை எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை முதல் சாதாரண நிலைக்கு திரும்பும் என்றும் தெரிவித்துள்ளது.
குறித்த காலநிலை காரணமாக ஒட்டாவா மற்றும் கிழக்கு ஒன்ராறியோ பகுதியில் உள்ள வீதிகள் மிகவும் அபாயகரமாக இருக்கும் என்றும் வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Loading...