Loading...
நெடுஞ்சாலை 401 இல் பல கார்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் 4 பேரை ஒன்ராறியோ மாகாண பொலிஸார் தடுத்து வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.
இவர்கள் நெடுஞ்சாலைப் பகுதியின் மேற்குப்பகுதிப் பாதையில் ஒரு வாகனத்தை இழுக்க முயன்றுள்ளதுடன், அவர்களை பொலிஸார் நிறுத்துமாறு கூறிய போதும் சாரதி வாகனத்தை நிறுத்த மறுத்துவிட்டார்.
Loading...
இதன் காரணமாக நெடுஞ்சாலை 400 க்கு அருகே நான்கு பொலிஸ் வாகனங்கள் மற்றும் சிறிய ட்ரக் ரக வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகியது.
இந்நிலையில் அவர்களை கைது செய்து தடுப்பு காவலில் வைத்துள்ள ஒன்ராறியோ பொலிஸார், அவர்கள் மீது போதைப்பொருள் பாவனையுடன் வாகனத்தை செலுத்திய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
Loading...