வடமேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.எஸ்.எஹியாவின் வீட்டில் பணம் மற்றும் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
மதுரங்குளி-கடையாமோட்டைப் பகுதியிலுள்ள அவரின் வீட்டிற்கு இன்று அதிகாலை வந்துள்ள இருவர், வீட்டில் இருந்த வயோதிபப் பெண்ணை கதிரை ஒன்றில் கட்டிவைத்துவிட்டு மூன்று அறைகளை உடைத்து அங்கிருந்த பொருட்கள் மற்றும் பணத்தை களவாடியுள்ளனர்.
இதேவேளை இந்த களவுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் இன்று அதிகாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் கம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என ஆரம்பக்கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
அத்துடன் வடமேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினரின் வீட்டில் பொலிஸார் மோப்பநாயுடன் தேடுதலை மேற்கொண்டு வருவதுடன், புத்தளம் மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரும், முந்தல் பொலிஸாரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.