பணிப்பெண்ணால் கட்டுநாயக்கவில் அவரசமாக தரையிறக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய விமானம்!!
உலகின் மிகப்பெரிய விமானங்களின் ஒன்றான ஏ-360 ரக விமானம் இன்று முற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.
எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான இந்த விமானம் , டுபாயில் இருந்து அவுஸ்திரேலியா நோக்கி பயணித்துள்ள நிலையில் , விமான பணிப்பெண்ணொருவருக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
முற்பகல் 10.25 மணியளவில் தரையிறக்கப்பட்ட விமானத்தில் 400 க்கும் அதிகமான பயணிகள் மற்றும் 11 பணியாளர்களும் இருந்துள்ளனர்.
சுகயீனமுற்ற பணிப்பெண்ணுக்கு நீர்க்கொழும்பு பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சையளிக்கப்பட்ட பின்னர் , பிற்பகல் 12.15 மணியளவில் விமானம் மீண்டும் புறப்பட்டுச் சென்றுள்ளது.
இதன்போது , விமானத்திற்கு 65 ஆயிரம் லீட்டர் எரிபொருள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிரப்பப்பட்டுள்ள நிலையில் , அதன் பெறுமதி 72 இலட்சம் ரூபாய்க்கும் அதிகம் என தெரிவிக்கப்படுகிறது.