29-12-2018 சனிக்கிழமை விளம்பி வருடம் மார்கழி மாதம் 14ம் நாள் தேய்பிறை. சப்தமி திதி காலை 8.45 மணி வரை பிறகு அஷ்டமி. உத்திர நட்சத்திரம் பிற்பகல் 1.50 மணி வரை பிறகு அஸ்தம்.
நல்ல நேரம் 7-8, 10.30-1, 5-8, 9-10.
எமகண்டம் மதியம் மணி 1.30-3.00.
இராகு காலம் காலை மணி 9.00-10.30..
குளிகை: 6-7.30
சூலம்: கிழக்கு.
பொது: திருநள்ளார் சனீஸ்வரபகவான் சிறப்பு ஆராதனை. இன்று கெருட தரிசனம், விஷ்ணுவாலய வழிபாடு இணையன நன்று
பரிகாரம்: தயிர்.
மேஷம்
குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள்.
வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.
ரிஷபம்
குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள்.
வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். கனவு நனவாகும் நாள்.
மிதுனம்
திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். மனதிற்கு இதமான செய்தி வந்து சேரும்.
வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.
கடகம்
குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். பழைய சிக்கலில் ஒன்று தீரும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். தைரியம் கூடும் நாள்.
சிம்மம்
கணவன்-மனைவிக்குள் அன்யோன் யம் பிறக்கும். அழகு, இளமைக் கூடும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உடல் நலம் சீராகும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.
கன்னி
ராசிக்குள் சந்திரன் தொடங்கியிருப்பதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைத் தூக்கும். உதவிக் கேட்டு உறவினர்களும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள்.
வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடை வார்கள். உத்யோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். பொறுமைத் தேவைப்படும் நாள்.
துலாம்
குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். அண்டை, அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். போராடி வெல்லும் நாள்.
விருச்சிகம்
குடும்பத்தின ருடன் மனம் விட்டு பேசுவீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். ஆடை, ஆபரணம் சேரும்.
வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். இனிமை யான நாள்.
தனுசு
கடந்த கால சுகமான அனுபவங்களை, சாதனைகளை அவ்வப் போது நினைத்து மகிழ்வீர்கள். உறவினர்கள், நண்பர்கள் ஆதர வாகப் பேசத் தொடங்குவார்கள்.
பிரியமான வர்களுக்காக விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோ கத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.
மகரம்
குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும்.
வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயமடைவீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்
கும்பம்
சந்திராஷ்டமம் தொடங்கியிருப்பதால் ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை பல முறை அலைந்து முடிப்பீர்கள்.
வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலை கழிக்கப்படுவீர்கள். விட்டுக் கொடுக்க வேண்டிய நாள்.
மீனம்
பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பயணங்களால் புத் துணர்ச்சி பெறுவீர்கள்.
வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். நன்மை கிட்டும் நாள்.