மனநலம் பாதிக்கப்பட்டிருந்த தாயை கொலை செய்த மகன், தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை சேர்ந்த நடேசன், தேனாம்பேட்டையில் பாதுகாவலராக பணியாற்றி வருகிறார். சமீபத்தில் இவர் தனது முதல் மனைவியை பிரிந்து வந்து இரண்டாவதாக திருமனம் செய்து கொண்டார். இதனால் நடேசனின் முதல் மனைவி மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
நடேசன் மற்றும் அவரது முதல் மனைவிக்கு விக்னேஷ்வரன் என்ற மகன் உள்ளார். இவர் பிரபல காபி உணவகத்தில் உணவு பரிமாறுபவராக பணியாற்றி வந்தார். சம்பவம் நடந்த நாளில் விக்னேஷ்வரன் வீடு வெகுநேரமாக உள்தாழிட்டு இருந்துள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டு கதவை தட்டியுள்ளனர். ஆனால் யாரும் திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வீட்டுக்குள் விக்னேஷ்வரன் தூக்கில் தொங்கியபடியும், அவரது தாய் சுந்தரவல்லி படுக்கையில் இறந்து கிடந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக உடனே பொலிசாருக்கு அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தேனாம்பேட்டை காவல்துறையினர், இருவரது உடலையும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக விசாரித்த பொலிசார், மனநலம் பாதிக்கப்பட்ட தாய் படும் வேதனையை பார்க்க முடியாமல் மகன் விக்னேஷ்வரன் அவரை கொலை செய்துவிட்டு பிறகு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் கூறியுள்ளனர்.
மேலும், விக்னேஷ்வரன் வேலை பார்க்கும் கடையில் உள்ள மேற்பார்வையாளரிடம் ரூ. 6,500 பணத்தை கூகுள் ப்ளேவில் அனுப்பி வைத்துள்ளார். அப்போது மேற்பார்வையாளர் கேட்டதற்கு “பணம் ஒரு நல்ல காரியத்திற்கு வேண்டும்” என விக்னேஷ்வரன் கூறியுள்ளார்.
தற்போது தான் அந்த பணம் தங்களது இறுதிச் சடங்கிற்காக விக்னேஷ்வரன் முன்கூட்டியே அனுப்பி வைத்துள்ளது தெரியவந்ததை தொடர்ந்து அந்த மேற்பார்வையாளர் கவலை தெரிவித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் வசிக்கும் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.