கிளிநொச்சி மாவட்டம் விசுவமடுப் பகுதியில் உள்ள இலங்கை வங்கி கிளையில் இன்று அதிகாலை தீ பரவியுள்ளது.
காலையில் பணிக்கு வருகை தந்த உத்தியோகத்தர்கள், வங்கியை திறந்த போது வங்கி புகை மண்டலமாகசிறிது நேரம் காட்சியளித்தது.
வங்கியிலிருந்து இருந்து புகை வருவதான அவதானித்த அயலில் உள்ள வர்த்தகர்கள் உடனடியாக, அது தொடர்பில் வங்கி ஊழியர்களுக்குத் தகவலை வழங்கினார்.
உடனடியாக தீ அணைப்பு சேவையின் உதவியும் நாடப்பட்டது.
இருந்த போதும் கிளையில் இருந்த கணனிகள் உள்ளிட்ட பல பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.
குறித்த தீ முதன் முதலாக காசு எண்ணும் இயந்திரத்தில் இருந்தே பரவியிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தீயிற்கான காரணம் சேதம் தொடர்பில் உடனடி விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
அப்பகுதியில் தொடர்ந்தும் இடம் பெறும் அசாதாரண சம்பவங்களால் மக்கள் மத்தியில் சோகமான மனநிலை காணப்படுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன..