நீர்கொழும்பு, பமுணுகம வீதியின் தூவ பாலத்திற்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து சம்பவம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12.15 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
பமுணுகம பகுதியிலிருந்து நீர் கொழும்பு நோக்கி பயணித்த கார் எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானமையினால் மேற்படி உயிரிழப்பு சம்பவித்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் 18 வயதுடைய நீர் கொழும்பு பகுதியை சேர்ந்த அமரசிங்க சீ . ஜேங்கி அஷான் சில்வா என அடையாளம் காணப்பட்டுள்ளது. விபத்தின் போது மோட்டார் சைக்கிள் ஓட்டுனரான மேற்படி இளைஞன் பாலத்தினுள் வீழ்ந்து நீரில் மூழ்கியுள்ளார் .
அதனையடுத்து விபத்தில் சிக்கிய இளைஞன் படுகாயமடைந்த நிலையில் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்துள்ளார.
மேலும் , உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக நீர்கொழும்பு வைத்திய சாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை துன்கல்பிட்டிய பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.