வவுனியாவில் வீதியில் சென்ற பெண்ணின் சங்கிலியை அறுத்துச் சென்ற சம்பவம் ஒன்று வவுனியா மயிலங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது
நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வவுனியாவிலிருந்து ஆசிகுளத்திலுள்ள தனது வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் ஆசிரியர் மயிலங்குளம் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இனம்தெரியாத இரு நபர்கள் அவர் அணிந்திருந்த தங்க சங்கிலியை அறுத்துசென்றுள்னர்
சம்பவத்தில் நிலை குலைந்த பெண் ஆசிரியர் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்துள்ளார். அதனால் சிறு காயங்கள் ஏற்பட்ட நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.
அறுத்துசெல்லப்பட்ட தங்கசங்கிலி ஒரு பவுண் மதிப்பிலானது என்று கூறப்படுகின்றது.
சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸாருக்கு தெரியபடுத்தபட்டுள்ளதையடுத்து மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.