டெல்லியில் பல் துலக்கும் போது பிரஷ்சை விழுங்கிய நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
எய்ம்ஸ் மருத்துவர்கள் வெற்றிகரமாக பிரஷ்சை வெளியே எடுத்துள்ளனர்.
டெல்லியின் சீமாபுரியை சேர்ந்தவர் அவிட் (வயது 36) என்பவர் பல் துலக்கும் போது பிரஷ் மூலம் தொண்டையையும் சுத்தம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக அந்த பிரஷ்சை விழுங்கி விட்டார்.
இதனால் வயிற்று வலியால் துடித்த அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அங்கு அவருக்கு சி.டி. ஸ்கேன் எடுக்கப்பட்டு பார்த்த போது அவரது வயிற்றின் மேல் பகுதியில் பிரஷ் சிக்கியிருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து எண்டோஸ்கோபி சிகிச்சை மூலம் அறுவை சிகிச்சை இன்றி அந்த பிரஷ் வெளியே எடுக்கப்பட்டது.
மருத்துவர்கள் விஷேச கண்ணி ஒன்றை பயன்படுத்தி லாவகமாக அந்த பிரஷ்சை வெளியே எடுத்துள்ளனர்.