யாழ்ப்பாணத்தில் பாவனையில்லாமல் அல்லது உரிமம் கோரப்படாமல் இருக்கும் தனியார் காணிகளைச் சுவீகரித்து புதிய குடியேற்றத் திட்டமொன்றை உருவாக்குவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைய யாழ் நகரை அண்மித்த கொழும்புத்துறை பகுதியிலேயே சுமார் 300 பரப்புக் காணியொன்று அடையாளப்படுத்தப்பட்டு அந்த இடத்திலே முதற்கட்டமாக புதிய குடியேற்றத் திட்டமொன்று மேற்கொள்ளப்பட்ட இருக்கின்றது.
யாழ் நகரத்தில் மக்கள் செறிவாக வாழ்வதால் அந்த நெருக்கடிகளிலில் இருந்து விடுபடுவதற்காக நகரை அண்மித்த பகுதிகளில் புதிய குடியேற்றங்களை மேற்கொள்வதற்கு யாழ்ப்பாண பிரதேச செயலர் மேற்கொண்டிருந்தார்.
இதற்கமைய யாழ் நகரை அண்மித்த கொண்ழும்புத் துறையில் நீண்டகாலமாக பாவனையில்லாமலும் உரிமம் கோரப்படாமலும் 300 பரப்பு காணி இருப்பது அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் இந்தக் காணிகயைச் சுவீகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆயினும் இந்த 300 பரப்புக் காணியில் தன்னுடைய சுமார் 80 பரப்புக் காணி இருப்பதாக ஒருவர் யாழ் அரச அதிபரிடம் நேற்று வியாழக்கிழமை முறைப்பாடு தெரிவித்திருக்கின்றார்.
அதன் போது உரிமம் கோரப்படாமலும் பாவனையில்லாமலும் இருந்த காணிகளையே எடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும்,
அந்தக் காணிகளுக்கு உரிமையாளர்கள் இருந்தால் அதற்கு நஸ்ர ஈடு வழங்குவதாகவும் அரச அதிபர் குறிப்பிட்டிருக்கின்றார்.
ஆயினும் அந்த 80 பரப்புக் காணியின் உரிமையாளர் தனக்கு நஸ்ர ஈடுகள் எவையும் வேண்டாம் என்றும் தன்னுடைய காணியே தனக்கு வேண்டுமெனக் கேட்டதற்கமைய அவருடைய காணியை விடுத்து ஏனைய 220 பரப்புக் காணிகளையும் சுவீகரித்து அங்கு புதிய குடியேற்றத் திட்டமொன்று மேற்கொள்ளப்படவுள்ளது.
இதே வேளை இக்காணிகள் நீண்டகாலமாக பாவனையில்லாமலும் இதுவரையில் யாரும் உரிமை கோரப்படாத நிலையும் இருந்த நிலையிலையே அக் காணிகளைச் சுவீகரித்து குடியேற்றத் திட்டமொன்றை மேற்கொள்வதற்கு யாழ்ப்பாண பிரதேச செயலர் நடவடிக்கை எடுத்திருந்தார்.
தற்போது ஒருவர் உரிமம் கோரியிருப்பதால் அந்தக் காணியை அவரிடமே வழங்கி ஏனைய காணிகளில் அந்த குடியேற்ற நறடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.