Loading...
1983-1984 களிலேயே பல தமிழர் சுவிற்சர்லாந்தில்தஞ்சம் அடைந்திருந்தனர். கன்ரோன் பேர்ணிலேயேபெரும்பாண்மையான தமிழர்கள் தமதுதஞ்சக்கோரிக்கையை பதிவு செய்திருந்தனர்.
இத்தஞ்சப்படையெடுப்பு இந்நாட்டு பிரஜைகளுக்குஓர் அதிர்ச்சியையும் ஆத்திரத்தினையும்கொடுத்திருந்தது. எமது நிறம் மொழி அனைத்தையும்இவர்கள் எம்மை ஓர் வேற்றுகிரகவாதிகள்பார்த்தார்கள். இதன் வெளிப்பாடாகஇனவாதக்கருத்துக்களும் வெறுப்புநடவடிக்ககைளையும் பொதுவெளியில்தமிழர்களிற்கு எதிராக நடைபெற்றது. உங்கள் நாட்டுக்கு திரும்பிப்போங்கள் எனஉமிழ்நீரால் துப்பிய சம்பவங்கள் பல நடந்தேறியது.
ஆனால் இச்சந்தப்பர்த்தில் உயர்ந்த பட்ச மனிதாபிமான பண்புடையோர் பலர்தமிழருக்கு உதவும் வகையிலும் ஆதரவு தர தஞ்சம் அடைந்த தமிழர்களை தேடிவந்தனர்.அதேபோல் பின்வரும் கட்சிகளும்
SAP (Die Sozialistische Arbeiterpartei),
PDA( Partei der Arbeit der Schweiz),
POCH (Die Progressiven Organisationen der Schweiz), SP(Sozialdemokratische Partei der Schweiz )
தஞ்சம் அடைந்த தமிழரின் இருப்புக்கு ஆதரவாக பல போராட்டங்களை செய்தனர்.
பல உதவிநிறுவனங்களும் தமிழர்களின் இருப்புக்கான பல போராட்டங்களில்இணைத்துக்கொண்டனர். ஆந்தவகையில் பின்வரும் நிறுவனங்கள் முக்கிய பங்காற்றின.
CFD (Christlicher Friedensdienst)
AAA (Aktion für Ausgewiesene Asylbewerber)
HEKS (Das Hilfswerk der Evangelischen Kirchen Schweiz)
CARITAS
Red Cross Schweiz
Freiplatzaktion Basel, Zürich
இவை மட்டுமல்லாது ஓவ்வொரு கிராம நகரங்களில் இருந்த கத்தோலிக்க கிறுஸ்தவதேவலாயங்களும் தமது ஆதரவினையும் ஓத்துழைப்புக்களையம் தமிழர்களிற்கு வழங்கிஇருந்தனர்.
இவ்வகையில் இலங்கையில் ஆயுதப்போராட்டம் ஆண்டடிற்கு ஆண்டு வலுபெற்றுவளர்ந்து வந்தது. அதேற்கேற்ப தளத்திலிருந்த அனைத்து விடுதலை இயக்கங்களிற்கானகிளைகளும் தஞ்சம் அடைந்த தமிழர்களினால் உருவாக்கபட்டது. தளத்தில் அவ்இயக்கங்கள் ஓருங்கிணைந்த வேலைத்திட்டத்தில் வேலை செய்யாத போதும் இந்நாட்டில்செயற்பட தொடங்கிய அனைத்து இயக்க அமைப்பாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்துதஞ்சம் அடைந்த தமிழர்களை திருப்பி அனுப்புவதற்கு எதிராக போராடவேண்டிய தேவைஏற்பட்டது. இதனால் பரஸ்பர புரிந்துணர்வு அனைத்து இயக்க அமைப்பாளரிடமும்காணப்பட்டது மட்டுமல்லாது எல்லோரும் ஓன்றிணைந்து பல ஆர்பட்டங்கள் உண்ணவிரதபோராட்டங்களை முன்னெடுக்கப்பட்டிருந்தது இருந்தது. இவற்றில் தமிழீழ மக்கள்விடுதலைக்கழக (PLOT) சுவிற்சர்லாந்து கிளை இந்நாட்டு பல அமைப்புக்களுடனும்கட்சிகளுடனும் தனது தொடர்புகளை வலுப்படுத்திகொண்டிருந்தது. இவ்வகையில்இந்நாட்டு மக்களிற்கான தமிழர்கள் ஏன் தஞ்சம் அடைந்தோம் இலங்கையில் எவ்வாறுதிட்டமிட்ட இன ஓடுக்குமுறை நடைபெறுகின்றோம் என்பதனை பாடசாலைகள்பல்கலைக்கழங்கள் தேவாலயங்களில் இயக்க பாரபட்சமற்று பல தகவல்களும்விளக்கங்களும் வழங்கப்பட்டது.
இவ் வரலாற்றில் இன்றைய தமிழர்களின்இருப்பிற்காக தமது வாழ்கையை அர்பணித்தவர்தான் டாக்டர் சூபரும் அவர் மனைவியுமான கைடி(Dr. Peter Zuber, Heidi Zuber) 1984 களில் சுவிற்சர்லாந்துஅரசு 300 தமிழ் அகதிகளை திருப்பி அனுப்புவதற்குநடவடிக்கைகளை எடுத்தது. டாக்டர் சூபர் 300அகதிகளையும் தனக்கு தெரிந்த குடும்பங்களுடன்தொடர்புகொண்டு பொலிசாரின் கண்களிற்குபுலப்படுத்தாது ஓளித்து வைக்கபட்டனர். அதன்பின்னர் அப்போது இருந்த நீதித்துறை அமைச்சராகஇருந்த எலிசபத் கொப் 300 தமிழர்களின் திருப்பி அனுப்பும் விடயத்தினை மறுபரிசீலனைசெய்வதற்கு உடன்பட்டார்.
அக்காலப்பகுதியில் பல தமிழர்கள் பேர்ண்புகையிரத நிலையத்திலேய நீண்;ட நேரத்தினைசெலவளித்தனர். இவ்விடயத்ததை வைத்துதமிழர்கள்மீது வெறுப்பினை உண்டாக்கும்வகையில் சுவிற்சர்லாந்து தொலைக்காட்சியினால்ஓர் நேரடி நிகழ்ச்சி ஓழுங்கு செய்யப்பட்டிருந்தது.இந்த தகவலையும் நிகழ்ச்சியின் கபடநோக்கத்தினையும் டாக்டர் சூபர் எமக்குஅறிவித்திருந்தார். அந்த நிகழ்ச்சியின் பெயர்இன்று பிற்பகலில் தமிழர்கள் பேர்ண் புகையிரதநிலையத்தில். அன்று சற்று பலமாக இருந்நு சுவிற்சர்லாந்து தமிழீழ மக்கள் விடுதலைஇயக்கத்தின் நிர்வாக குழு உறுப்பினர்கள் புகையிரத நிலைத்திற்குள் தமிழர்கள்செல்லாது தடுத்திருந்தனர். அவ்வகையில் அந்த நிகழ்ச்சியில் படு தோல்வி அடைந்துஇறுதியாக இன்று தமிழர்கள் இன்று
பிற்பகல் புகையிரதநிலையத்தில் இல்லை என்று முடித்திருந்தது.
அதேபோன்று பேர்ண் பத்திரிகையில் (Berner Zeitung)வேலை செய்த ஓர் நிருபர் எம்முடன் நல்ல தொடர்பில்இருந்திருந்தார். அவர் சுவிற்சர்லாந்திலிருந்து திருப்பிஅனுப்புவதற்கான பேச்சுவார்த்தையில்ஈடுபடபடுவதற்கு அக்காலகட்டத்தில் இலங்கையின்வெளிநாட்டு அமைச்சாராக இருந்த ஹமீத்வந்திருந்தார். வந்த அமைச்சர் எங்கு தங்குகின்றார்எப்பொழுது Hotel இல் இருந்து வெளியில் வருகின்றார்என்ற செய்திகளும் எமக்கு தெரிவிக்கபட்டடிருந்தது.இந்தகவலை நாம் தஞ்சம் அடைந்திருந்த தமிழர்விடுதிகளிற்கு அறிவித்து 60 பேரை திரட்டி இருந்தோம். Hotel Bellevue Bern இலே அமைச்சர் தங்கியிருந்தார். அவர் விடுதியைவிட்டு வெளியில்வரும்போது 60 தமிழர்கள் கண்டன அட்டைகளுடனும் வாயை மூடியவண்ணம் பாதையைஓரத்தில் காத்திருந்தோம். இதன் போது 20 க்கு மேற்பட்ட பத்திரிகை நிருபர்களும்தொலைக்காட்சியும் சமுகம் அளித்திருந்தனர். இப்போராட்டம் திடீரென ஏற்பாடுசெய்ததினால் எவ்வித அனுமதியும் பெறப்படவில்லை. எமது கண்டனங்களையும்இலங்கை அரசின் அடாவடி இன ஓடுக்குமுறையையும் அம்பலப்படுத்தியிருந்தோம்.பேர்ண் பொலிசார் எமது போரட்டத்தினை தடுக்க எம்மை பலோத்காரமாக இழுத்துபெரிய பொலிஸ் வாகனத்தில் அடைத்து நாய்களை போல் இழுத்து அடைத்து சென்றனர்.நாம் போரட்டத்திற்கு முன்னதாகவே பல நிறுவனங்களிற்கு அறிவித்து சென்றதினால் ஓருசில மணித்தியாலங்களிற்கு பின்னர் எம்மை விடுதலை செய்தனர். ஆனால் அடுத்த நாள்அனைத்து சுவிற்சர்லாந்து தொலைக்காட்சியிலம் பத்திரிகைகளிலும் தலைப்பு செய்திஆனது.
இதே போன்று பல ஆர்பட்ட ஊர்வங்கள்சுவிற்சர்லாந்து மக்களின் கவனத்தினையும்அனுதாபத்தினையும் பெறும் வகையில்நடைபெற்றது. ஆக்காலப்பகுதியில் ஏற்பாடுசெய்யப்பட்ட பல தமிழர் போரட்டங்களில் (SAP, PDA, POCH) கலந்து கொண்டு எமது போராட்டங்களிற்குவலு சேர்த்தனர். நடைபெற்ற போராட்டங்கள் தனியேதிருப்பி அனுப்புவதற்கு எதிராக மட்டும்இருக்கவில்லை மாறாக இலங்கை அரசின் இனஓடுக்குமுறையை அம்பலப்படுத்துவதாகவும்சுவிற்சர்லாந்து அரசின் அகதி கொள்கைக்குஎதிராகவும் அமைந்திருந்தது.
இதேகாலகட்டங்களில் இனவாதமும் மேலோங்கி இருந்தது. இதனால் இனவாதத்திற்கும்எதிராக அதிதீவிர இடதுசாரிகளின் போராட்டங்களிலும் கலந்து போராடினோம்.அந்தவகையில் 1987 ளில் பல தீவிர இடதுசாரிகள் சட்டத்திபற்கு முரணாக தமதுவசிப்பிடங்களை தமது விருப்பத்திற்கு இணங்க பழைய வாகனங்களில் அமைத்துகொண்டடிருந்தனர். அவர்களின் போராட்டம் மக்களின் சுயாதீனமான வாழ்வுக்கானபோராட்டமாக அமைந்திருந்தது. இவர்களை அகற்றும் வகையில் பேர்ண் பொலிசாரின்அராஜகம் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தது. இதனை தடுக்குமுகமாக முற்போக்குசக்திகளால் பாரிய போராட்டம் ஓர் புரட்சியாக
Zaffaraya என்ற பெயரில் வெடித்தது.இப்போரட்டத்திலும் எம்மை இணைத்துகொண்டோம். இப்போராட்டத்தில் ஏற்பட்டதொடர்புகளினால் தற்பொழுது அமைந்திருக்கும்Reithalle Bern இல் அக்காலகட்டத்தில் பலகூட்டங்கள் சந்திப்புக்களை அங்கேயே நடாத்திவந்தோம். நிக்கரகாவுவா மற்றும் தென்ஆபிரிக்கா பாலஸ்தீனம் ஆகிய நாடுகளில்ஈடுபட்ட பல போரட்ட சக்திகளுடனானசந்திப்புக்களிலும் கலந்து கொண்டோம். அங்குஅமைக்கப்ட்டிருந்த உணவு விடுதியில் தமிழ் உணவும் முக்கியாமானது. அதற்கு பிற்பட்டகாலப்பகுதியில் அங்கு அமைக்கபட்ட திரையரங்கில் ஓரு சிலதமிழ்திரைப்படங்களையும் திரையிட்டோம்.
Loading...
ஆனால் சாதரணமாக தமிழர்கள் இதனை கட்டுக்காய்
பார்க் என்பர் அல்லது தூள்காரார் என்பார்கள். ஆனால் உள்ளேஇருந்த அதிதீவிர இடதுசாரிகள் பெரும்பாண்மையினரால்ஏற்றகொண்ட இந்த அமைப்புமுறையினர் முற்றாகஎதிhத்தனர். ஆனாலும் அகதிகளை திருப்பி அனுப்புதல்மற்றும் வலது தீவிர வாதிகளின் இனவாத வன்முறைக்கு பதில்கொடுப்பவார்களாக இருந்தனர். பெரும்பாலும்இவ்விடத்திற்கு வர பல தமிழர்கள் பயந்தனர். ஆனால் பேர்ண்பொலிசாரினால் மேற்கொள்ளபட்ட கடுமையானதாக்குதலின் போது நான் அவர்களிடம் கூடியிருந்த ஞாபகங்கள் பசுமையாகவும்விளிப்பாகவும் உள்ளது.
பார்க் என்பர் அல்லது தூள்காரார் என்பார்கள். ஆனால் உள்ளேஇருந்த அதிதீவிர இடதுசாரிகள் பெரும்பாண்மையினரால்ஏற்றகொண்ட இந்த அமைப்புமுறையினர் முற்றாகஎதிhத்தனர். ஆனாலும் அகதிகளை திருப்பி அனுப்புதல்மற்றும் வலது தீவிர வாதிகளின் இனவாத வன்முறைக்கு பதில்கொடுப்பவார்களாக இருந்தனர். பெரும்பாலும்இவ்விடத்திற்கு வர பல தமிழர்கள் பயந்தனர். ஆனால் பேர்ண்பொலிசாரினால் மேற்கொள்ளபட்ட கடுமையானதாக்குதலின் போது நான் அவர்களிடம் கூடியிருந்த ஞாபகங்கள் பசுமையாகவும்விளிப்பாகவும் உள்ளது.
இனவாதத்தின் உச்சக்கட்டத்தில் தமிழர்கள்உதவிப்பணத்தினை தவறாகபயன்படுத்துவதாக கூறி தூண் மாநகர சபைதமிழருக்கான தனியான நாணயத்தினைதமிழ் அகதிகளிற்கு விநியோகித்திருந்தனர்.இது அப்பட்டமான இரண்டாம்தர பிரசைகளாகஇனங்கானுவதற்கான நடவடிக்கை.இவ்வகையில் தென் ஆபிரிக்காவில் இனவெறிஅரசினால் நடைமுறைப்படுத்தபட்ட Apartheidக்கு ஓப்பனாது என பலர் விமர்சித்துஇருந்தனர். இவ்விடயத்ததை எடுத்துகாட்டி இப்புதிய நாணயத்தினை சுவிற்சர்லாந்துபாராளுமன்றத்தில் துக்கி எறிந்த வரலாறுகளும் நடைபெற்றன.
80, 90 களில் நடைபெற்ற பல வரலாறுகள் பதிவு செய்யப்படாதினால் தற்பொழுதுமேடைகளில் புத்திஜீவிகளாவும் வரலாற்று நாயர்களாகவும் கலைஞர்களாக பவணிவரும்பலருக்கு இந்த வரலாறுகள் தெரியாது போயுள்ளது. இவ்வகையில் அன்றைய பலபுத்திஜீவிகள் இன்றைய தமிழர் இருப்புக்கு காரணமானவர்கள் தம்மைபற்றிய பதிவுகள்அற்று காணாமல் போயுள்ளனர் அல்லது காலம் அடைந்துள்ளனர். ஆதலால் அன்றையகாலப்பகுதியில் ஆரம்பிக்கபட்ட தமிழ் கல்விக்கூடங்கள் கலைநிகழ்வுகள் மற்றும்வானொலிகள் பத்திரிகைகள் சஞ்சிகைகள் இவற்றில் பங்கெடுத்த வரலாற்று நாயகர்கள்பற்றி குறிப்புக்களை பதிவு செய்யலாம் என நினைத்துள்ளேன். யாரவது சுவிற்சர்லாந்துதமிழ்மக்களின் வராலாற்றினை தொகுப்பார்கள் தானே என்று நீண்டகாலம் காத்துஇருந்துவிட்டேன்.
அன்றைய காலப்பகுதியில் எவ்வித செயற்பாடும் அற்று தமது வாழ்கையை பார்த்துகொண்டிருந்த இன்றைய சில பிரமுகர்கள் உச்சக்கட்ட வெற்றிகர ஆயுதபோராட்டம்நடைபெற்ற போது அடித்துபிடடித்து LTTE,TELO,PLOT,EPRLF,EROS தம்மைஅடையாளப்படுத்தி கொண்டனர். ஆனால் வரலாற்றில் பலரின் தன்னலமற்றசெயற்பாடுகள் மறைக்கப்பட்டுவிடக்கூடாது என்ற ஆர்வத்தினால் சில சம்பவங்களைபதிவிட்டுள்ளேன். இதை வாசித்த வரலாற்று கதாநாயகர்கள் என்னுடன் தொடர்புகொண்டால் பல சம்பவங்களை நாம் இரண்டாவது மூன்றாவது சுவிற்சர்லாந்து சந்ததிக்குவிட்டுசெல்லாம்.
கதையாசிரியர் கணபதிப்பிள்ளை சுதாகரன்
வரலாற்று பதிவு தொடரும்…..
Loading...