Loading...
வடக்கு ஆளுனராக மார்ஷல் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார் என ஜனாதிபதி செயலக வட்டாரங்களால் ஈ.பி.டி.பிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என, அந்த கட்சியின் பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் மூத்த ஆலோசகர் ஒருவர் இன்று காலையில் ஈ.பி.டி.பியிடம் இந்த தகவலை பரிமாறியதாக தெரிகிறது.
Loading...
சுதந்திரக்கட்சியின் முன்னாள் அமைச்சர் டிலான் பெரேராவின் தந்தையே மார்ஷல் பெரேரா ஆவார். தென் மாகாண ஆளுனராக இதுவரை பதவி வகித்து வந்தார்.
டிலான் பெரேராவின் வலியுறுத்தலாலேயே, ஈ.பி.டி.பியின் விருப்பத்திற்கமைவான தெரிவை மேற்கொள்ள முடியவில்லையென ஈ.பி.டி.பி பிரமுகர்களிடம் ஜனாதிபதியின் ஆலோசகர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது.
Loading...