பலாங்கொட மொரகெல- உடவெல பிரதேசத்தில் அமைந்துள்ள சணச வங்கியில் 15கோடி ரூபாய் பணத்துடன் தப்பியோடிய குறித்த வங்கியின் முகாமையாளராக பெண்ணை தேடி பின்னவல பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இது தொடர்பாக பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி எஸ்.பீ.அமரதுங்க கருத்துத் தெரிவிக்கையில்,
குறித்த நபர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லாதபடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பலாங்கொட நீதிமன்றில் இது தொடர்பான அறிக்கை செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக வாடிக்கையாளர்கள் பலர் முறைப்பாடு செய்துள்ளனர்.
சந்தேக நபரான குறித்தபெண்ணும் அவரது கணவரும் குறித்த பிரதேசத்தை விட்டு தப்பிச்சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
குறித்த சம்பவம் தொடர்பாக இரத்தினபுரி விசேட குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாணைகளை மேற்கொண்டுள்ளனர்.