Loading...
சிவனொளிபாத மலைக்கு அருகில் காணப்படும் உணவகங்களில் அதிகளவு கட்டணம் அறவிடப்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக நல்லத்தண்ணி பொலிஸ் நிலையத்திற்கு அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அதன் பொறுப்பதிகாரி லக்சிறி பெனார்ந்தோ நேற்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளார்.
Loading...
ஆகையால் இனிவரும் காலங்களில் வாராந்த சுற்றி வலைப்பை மேற்கொள்ள உள்ளதாகவும் இச்சுற்றிவலைப்பில் அதிகளவு கட்டணங்களை அறவிடும் வர்த்தக நிலையங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சிவனொளிபாதமலையின் பருவகாலம் ஆரம்பித்து 20 நாட்கள் கடந்துள்ள நிலையில், அதிகளவான யாத்ரீகர்கள் வருகைதர ஆரம்பித்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Loading...