Loading...
போர்ட்டேஜ் லா ப்ரேய்ரீயில் இரண்டு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கனடாவின் போக்குவரத்து பாதுகாப்பு சபையின் இரு அதிகாரிகள் இவ்விபத்து குறித்து தற்போது விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
Loading...
குறித்த விபத்தினால் புகையிரதப் பெட்டிகளும் ரயில் வண்டிகளும் தடம் புரண்டதாக போக்குவரத்து போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
குறித்த இரண்டு ரயில்களும் கிழக்கு போர்ட்டேஜ் லா ப்ரேய்ரீயில் உள்ள போவ்ஸ் டிரைலர் பார்க் பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ் விபத்தின் போது, நடத்துனர் சிறு காயங்களுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...