ஜா- எல – வெலிகம்பிட்டிய பிரதேசத்தில் ஏற்பட்ட வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
இன்று அதிகாலை 2.15 மணியளவில் கொள்கலன் பார ஊர்தி வீதியை விட்டு விகியதால் குறித்த விபத்து நேர்ந்துள்ளது.
கொழும்பிலிருந்து நீர்கொழும்பு நோக்கி அதிக வேகத்தில் பயணித்தபோது வீதியின் அருகில் இருந்த உணவகத்திற்குள் புகுந்த கொள்கலன், அருகில் இருந்த முச்சக்கரவண்டி ஒன்றுடனும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில் குறித்த பார ஊர்தி ஒரு வீட்டின் மதிலை உடைத்துச்சென்று அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி மீது மோதி வீட்டின் முன் பகுதியை உடைத்து கொண்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாரஊர்தியின் உதவியாளர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் பார ஊர்தியின் சாரதி படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, வீதியில் நின்ற மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.