அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகனின் அலுவலக தலைமை நிர்வாகி ரியர் அட்மிரல் கெவின் ஸ்வீனே இராஜிநாமா செய்துள்ளார்.
பாதுகாப்புச் செயலாளர் ஜேம்ஸ் மட்டிஸ் இராஜிநாமா செய்து ஒருமாத காலத்தில் கெவின் தமது பதவியை இராஜிநாமா செய்துள்ளார்.
தமது இராஜிநாமா தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள கெவின், அரச துறையிலிருந்து விலகி தனியார் துறைக்குச் செல்வதற்கான சரியான தருணம் வந்துவிட்டதென கூறியுள்ளார்.
சிரியாவிலிருந்து அமெரிக்க துருப்புக்களை மீளப் பெறவேண்டி ஏற்படுமென ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த பின்னர், பென்டகனிலிருந்து விலகிச் செல்லும் மூன்றாவது சிரேஷ்ட அதிகாரி இவரென்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2017ஆம் ஆண்டு பென்டகனின் அலுவலக தலைமை நிர்வாகியாக பொறுப்பேற்ற கெவின், கடந்த இரண்டு வருட காலமாக சிறப்பாக பணியை முன்னெடுத்ததாக குறிப்பிட்டுள்ளார்.
சிரியா தொடர்பில் ஜனாதிபதி ட்ரம்ப் வெளியிட்ட கருத்தின் பின்னர், பென்டகனின் பேச்சாளர் டனாவும் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.