Loading...
மொரகஹகந்த களுகங்கை நீர்த்தேக்க திட்டத்தின் அணைக்கட்டு நாளை மறுதினம் (செவ்வாய்க்கிழமை) திறந்து வைக்கப்படவுள்ளது.
மஹாவலி பாரிய திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட இறுதி நீர்த்திட்டமான குறித்த அணைக்கட்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் திறந்து வைக்கப்படவுள்ளது.
Loading...
இந்த அணைக்கட்டு 450 கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த நீர்த்தேக்க திட்டத்தின் மூலம் மூவாயிரம் குடும்பங்களுக்கு நீர் வழங்கப்படவுள்ளது.
நாட்டில் அமைக்கப்பட்ட சுற்றாடலுக்கு பொருத்தமான திட்டமான மொரஹகந்த களுகங்கை திட்டத்தை அடையாளப்படுத்த முடியும் என திட்டத்தின் பணிப்பாளர் டீ..பி.விஜயரட்ன தெரிவித்துள்ளார்.
Loading...