மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குடா பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவர் கல்லடி பாலத்திலிருந்து குதித்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையாக பொலிசார் தெரிவித்தனர்.
கடந்த காலங்களில் பலர் குறித்த பாலத்தில் இருந்து குதித்து தமது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவங்கள் பதிவாகியிருந்தும் குறித்த விடயம் தொடர்பில் பலர் மாவட்ட நிருவாகத்திற்கு பல திட்டங்களை
பரிந்துரை செய்தும் இன்று வரை உயிர் இழப்பை தடுக்க மட்டக்களப்பு நிருவாகம் தொடர்ந்தும் மந்த கதியிலேயே இருக்கின்றது .
இன்றும் கூட 16 வயதுடைய நாவற்குடாவை சேர்ந்த யுவதி ஒருவர் பாலத்தில் இருந்து குதித்து 3 மணித்தியாலங்களின் பின்னரே மீட்புப் பணிகள் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையே காணப்படுகின்றது.
குறித்த யுவதியின் காதலன் என சந்தேகிக்கப்படும் ஆரையம்பதியைச் சேர்ந்த இளைஞனை மட்டக்களப்பு பொலிசார் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த சம்பவத்தினை கேள்வியுற்று கல்லடி பாலத்தை நோக்கி வருபவர்கள் செல்பி எடுப்பதிலும் புதினம் பார்ப்பதிலும் ஆர்வம் காட்டுவதே தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமை வேதனைக்குரியதே.